×

ரோஜா முத்தையா நூலகத்தில் 2,000 புத்தகங்கள் மழையில் சேதம்: புதிய கட்டமைப்புகளோடு மாற்றி அமைக்க கோரிக்கை

சென்னை: தரமணியில் உள்ள தமிழ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ரோஜா முத்தையா நூலகத்தை சரியான கட்டமைப்புகளோடு மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ் பண்பாட்டின் அறிய நூல்கள் அடங்கிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக கட்டடமும் மிக்ஜாம் புயலுக்கு தப்பவில்லை. கனமழையால் இந்த நூலகத்தில் உள்ள 2000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மழைநீரில் நனைந்து சேதமடைந்துள்ளன. பழைய புத்தக கடைகளில் மழையில் நனைந்த புத்தகங்களை வெயிலில் உலர்த்தி பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள்.

ஆனால் வெயிலில் காயவைக்கும் பொழுது தாள்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி புத்தகம் சேதமடைவதை தவிர்க்க முடிவதில்லை இந்நிலையில் ரோஜா முத்தையா நூலகத்தில் புதுமையான முறையில் புத்தகங்கள் உலர்த்தப்பட்ட வருகின்றன. சேதமடைந்த புத்தகங்களை மீண்டும் தண்ணீரில் அலசி போல்டரிங் பேப்பர் என்ற நீர் உறிஞ்சும் காகிதத்தை ஒவ்வொரு காகிதத்தின் இடையிலும் வைத்து குறைந்த வெப்பநிலையோடு மின்விசிறியில் காயவைத்து அதை பழைய நிலைக்கு மீது வருகிறார்கள்.

இந்தியாவின் மிக பெரிய ஆவண சேமிப்பு நூலகமான ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பல்வேறு துறையை சார்ந்தவர்களும், முனைவர் பட்டத்திற்கு முயல்பவர்களும் குறிப்புகளை எடுத்து செல்வது வழக்கம். எண்வ தமிழின் ஆராய்ச்சிகளுக்கு உதவும் இந்த நூலகத்தை இயற்கை சீற்றங்கள் அண்டாத வகையில் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழின் தொன்மையை தமிழரின் வரலாற்றை பாதுகாக்கும் இந்த நூலகத்தை புயல் வெள்ளத்திலிருந்து பாதுகாக்க புதிய கட்டமைப்புகளோடு மாற்றி அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

The post ரோஜா முத்தையா நூலகத்தில் 2,000 புத்தகங்கள் மழையில் சேதம்: புதிய கட்டமைப்புகளோடு மாற்றி அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Roja Muthiah Library ,Chennai ,Taramani ,
× RELATED மூதாட்டியிடம் நகை பறிப்பு