×

சாதிச்சான்று வழங்காததால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு.. பல ஆண்டுகளாக மின்சார வசதியில்லை: காட்டுநாயக்க சமுதாய மக்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மேல சாத்தான்குளம் பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமுதாயத்திற்கு மின் இணைப்பு, சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மேல சாத்தான்குளம் அம்மன் கோயில் தெரு பகுதியில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

அதேபோன்று ரேசன் கார்டு, ஆதார் அட்டை, தேர்தல் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளுக்கு மின் இணைப்பு மட்டும் இல்லாததால் இரவு நேரங்களில் குழந்தைகள் படிக்க முடியாமல் தவிப்பதாக கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதேபோன்று சாதிச்சான்று வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனிடையே நீர்ப்பிடிப்பு பகுதியில் வசிப்பதால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என மின் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.

The post சாதிச்சான்று வழங்காததால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு.. பல ஆண்டுகளாக மின்சார வசதியில்லை: காட்டுநாயக்க சமுதாய மக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Upper Satankulam ,Thoothukudi District ,Katunayake ,Dinakaran ,
× RELATED ஆர்டிஐ மூலம் பல்வேறு கேள்விகளை கேட்ட சமூக ஆர்வலருக்கு சரமாரி வெட்டு