×

நான்கு அடுக்கு பாதுகாப்பு இருந்தும் நாடாளுமன்ற தாக்குதலை தடுக்க முடியாதது ஏன்? ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

பரமக்குடி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் சோ‌.பாலகிருஷ்ணன் இல்ல திருமண விழா ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் மக்களவையில் நடந்த தாக்குதல் ஒன்றிய அரசின் கவனக்குறைவை காட்டுகிறது. 22 ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் 13ம் தேதி பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. மீண்டும் டிசம்பர் 13ம் தேதி தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்தனர். இது பயங்கரவாத தாக்குதல் அல்ல.

இருந்தாலும் இது ஒரு தாக்குதல் தான். மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா என வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், ஒரே இடத்தில் ஒன்று கூடி தங்கி யாருடைய தூண்டுதலின்பேரில் தாக்குதல் செய்திருக்கிறார்கள்? உளவுத்துறை என்ன செய்கிறது?. மூன்றடுக்கு பாதுகாப்பு, நான்கடுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்களே தவிர எந்த அடுக்கு பாதுகாப்பும் இந்த தாக்குதலை தடுக்க முடியவில்லையே?

உளவுத்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ், டெல்லி காவல் துறை, நாடாளுமன்ற பாதுகாப்பு துறையை தாண்டி, நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து பார்வையாளர்கள் அரங்கம் வரை சென்று அங்கிருந்த பாதுகாவலர்களை மீறி அறைக்குள் குதித்து கண்ணீர் புகை வெடியை வெடிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க அரசினுடைய, அரசின் அங்கங்களுடைய கவனக்குறைவை காட்டுகிறது. ஐந்து, ஆறு மாதங்கள் முகநூலில் நண்பர்களாகி பயிற்சி பெற்றதை உளவுத்துறை கண்டுபிடிக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

The post நான்கு அடுக்கு பாதுகாப்பு இருந்தும் நாடாளுமன்ற தாக்குதலை தடுக்க முடியாதது ஏன்? ஒன்றிய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Parliament ,P. Chidambaram ,Union Government ,Paramakkudy ,president ,Tamil Nadu Congress Committee ,So. Balakrishnan ,Ramanathapuram district ,
× RELATED தோல்வி என்பது பிரதமர் மோடிக்கு தான்,...