சென்னை: ஆசிரியர், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. பின்னர் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: பல்வேறுகட்டமாக ஜாக்டோ-ஜியோ மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பிறகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நிதி அமைச்சர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தியும், பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை முறைப்படுத்துவது குறித்து அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது.
தேர்தல் நேரத்தில் அளித்த மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டு வருகிறோம்.ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்ட முடிவின் அடிப்படையில் 28ம் தேதி லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கோட்டை நோக்கி முற்றுகை இயக்கம் மூலம் முதல்வரை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. எனவே, முதல்வர், உடனடியாக ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
The post 28ம் தேதி கோட்டை முற்றுகை ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு appeared first on Dinakaran.