×

இந்திய அணிகள் ஆடும் ஐந்து நாடுகள் ஹாக்கி இன்று ஆரம்பம்

வெலன்சியா: இந்தியா ஆடவர், மகளிர் அணிகள் உட்பட 5 நாடுகள் களம் காணும் சர்வதேச ஹாக்கிப் போட்டி இன்று ஸ்பெயினில் தொடங்குகிறது. இந்நிலையில் 5 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச ஹாக்கிப் போட்டி இன்று ஸ்பெயினின் வெலன்சியா நகரில் தொடங்குகிறது. ஆடவர் பிரிவில் இந்தியா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் அணிகளும், மகளிர் பிரிவில் இந்தியா, அயர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் களம் காண உள்ளன. இன்று நடைபெறும் 2 ஆட்டங்களிலும் ஸ்பெயின்-இந்தியா மகளிர், ஆடவர்கள் அணிகள் மோதுகின்றன.

அதற்காக சவீதா தலைமையில் இந்திய மகளிர், ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் ஆடவர் அணிகள் டிச.11ம் தேதி ஸ்பெயினுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆடவர் அணியில் தமிழ் நாடு வீரர் கார்த்தி செல்வம் இடம் பெற்றுள்ளார்.ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும் இந்தப் போட்டி டிச.22ம் தேதியடன் முடிகிறது. ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஜன.13ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆட்டங்கள் இந்திய அணிகளுக்கு பயிற்சி ஆட்டங்களாக அமையும்.

* இந்திய அணி ஆடவர் அணி:
ஹர்மன்பிரீத் சிங்(கேப்டன்), அமீத் ரோகிதாஸ், சுமித்(துணைக் கேப்டன்கள்), ஜெர்மன்பிரீத் சிங், ஜூகராஜ் சிங், வருண் குமார், சஞ்ஜெய், நீலம் சஞ்ஜீப்(தற்காப்பு ஆட்டக்காரர்கள்), ஸ்ரீஜேஷ் ரவீந்திரன், கிருஷ்ணன் பகதூர்(கோல் கீப்பர்கள்), யாஷ்தீப், விவேக் சாகர், நீலகண்ட சர்மா, பால் ராஜ்குமார், ஷம்ஷெர் சிங், ரபிசந்திரா சிங்(நடுகள ஆட்டக்காரர்கள்), மன்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார், கார்த்தி செல்வம்(தமிழ்நாடு), தில்பிரீத் சிங், அக்‌ஷதீப் சிங்(முன்கள ஆட்டக்காரர்கள்.

* மகளிர் அணி:
சவீதா(கேப்டன்), பிச்சு தேவி(விக்கெட் கீப்பர்கள்), நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்ரி, குர்ஜித் கவுர், அக்‌ஷதா அபசோ(தற்காப்பு வீராங்கனைகள்), நிஷா, வைஷ்ணவி விட்டல், மோனிகா, சலிமா தட்டே, நேஹா, நவீன் கவுர், சோனிகா, ஜோதி, பல்ஜித் கவுர்(நடுகள வீராங்கனைகள்), ஜோதி சாத்ரி, சங்கீதா குமாரி, தீபிகா, வந்தனா கட்டாரியா(துணைக் கேப்டன்), பியூட்டி தன்துங், ஷர்மிளா தேவி(முன்கள வீராங்கனைகள்)

The post இந்திய அணிகள் ஆடும் ஐந்து நாடுகள் ஹாக்கி இன்று ஆரம்பம் appeared first on Dinakaran.

Tags : Valencia ,India ,Spain ,
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...