சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் தமிழக கேடரில் தேர்வான 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கடந்த ஓராண்டாக தமிழ்நாட்டில் மதுரை, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார் பெறுவது எப்படி, புகாரின் மீது எப்ஐஆர் பதிவு செய்வது எப்படி, வழக்கை விசாரணை மற்றும் புலனாய்வு செய்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாவட்ட வாரியாக ஏஎஸ்பியாக பணி நியமனம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, தமிழ்நாடு கேடரில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வான 8 ேபர் ஓராண்டு பயிற்சிக்கு பிறகு நேற்று மாவட்ட ஏஎஸ்பியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: துரை மாவட்டத்தில் உதவி எஸ்பியாக பயிற்சி பெற்று வந்த கம்பம் சாமுவேல் பிரவீன் கவுதம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் உதவி எஸ்பியாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த கேல்கர் சுப்ரமணிய பால்சந்திரா தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர உதவி எஸ்பியாகவும், வேலூர் மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த பிரசன்னகுமார் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி உதவி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுபோல, ஈரோடு மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த ஷானாஸ் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு உதவி எஸ்பியாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த சிபின் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர உதவி எஸ்பியாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த சிவராமன் ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் உதவி எஸ்பியாகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த உதயகுமார் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உதவி எஸ்பியாகவும், கரூர் மாவட்டத்தில் பயிற்சி பெற்று வந்த யாங்சென் டோமா பூட்டியா குமரி மாவட்டம் நாகர்கோவில் உதவி எஸ்பியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
The post ஏஎஸ்பியாக பயிற்சி முடித்த 8 பிஎஸ் அதிகாரிகள் புதிதாக பணி நியமனம்: உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு appeared first on Dinakaran.