×

எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் படலத்தை அகற்றுவது குறித்து ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டம்

சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் படலத்தை அகற்றுவது குறித்து உள்ளூர் அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், தலைமையில் இன்று நடைபெற்றது.

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையின் காரணமாக, சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் படலத்தை அகற்றுவது குறித்து உள்ளூர் அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், தலைமையில் இன்று (14.12.2023) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் படலத்தை அகற்றுவது குறித்து மாநில அளவில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தலைமையில் ஏற்கனவே நடைபெற்ற பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட வேண்டிய மருத்துவ முகாம்கள் மற்றும் கால்நடை மருத்துவ முகாம்கள், பாதிக்கப்பட்ட வீடுகளின் முழுமையான கணக்கீடு, படகு மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சேதங்கள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய கள நடவடிக்கைகள் குறித்து இன்று உள்ளூர் அளவில் நடைபெற்ற கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆணையாளர்கள் சங்கர்லால் குமாவத், (சுகாதாரம்), ஆர்.லலிதா, (வருவாய் (ம) நிதி), தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன், காணொலி காட்சி வாயிலாக உள்ளூர் அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மாவட்ட வன அலுவலர், தொழிற்சாலைகள் துணை தலைமை ஆய்வாளர், மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர், மாவட்ட ஆற்றல் துறை அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் படலத்தை அகற்றுவது குறித்து ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Disaster Management ,Committee ,Commissioner ,Radhakrishnan ,Totur estuary ,Chennai ,Tulur estuary ,Disaster Management Committee ,Dinakaran ,
× RELATED தேனியில் சுட்டெரிக்கும் வெயிலால்...