×

ஊட்டியில் நீர் பனி தாக்கம் அதிகரிப்பு; ரோஜா பூங்காவில் உதிர்ந்த மலர்கள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஊட்டி: ஊட்டியில் நீர் பனி தாக்கம் அதிகரிப்பால் ரோஜா பூங்காவில் பெரும்பாலான செடிகளில் மலர்கள் உதிர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவிற்கு செல்கின்றனர். பூங்காவில் உள்ள 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம். ஆண்டுதோறும் கோடை சீசனின்போது இந்த ரோஜா செடிகள் மலர்கள் பூக்கும் வகையில் கவாத்து செய்யப்பட்டு அனைத்து செடிகளிலும் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

கடந்த சில மாதங்களாக ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் தற்போது மழை குறைந்து நீர்பனி கொட்டி வருகிறது. இதனால், ரோஜா பூங்காவில் மலர்கள் உதிர ஆரம்பித்துள்ளன. தற்போது ஒரு சில செடிகளில் மட்டுமே மலர்கள் காணப்படுகிறது. இந்த மலர்களும் ஓரிரு நாட்களில் உதிர்ந்துவிடும். அடுத்த மாதத்திற்கு மேல் முதல் சீசனுக்கான பணி மேற்கொள்ளப்படும் நிலையில் பிப்ரவரி மாதமே இனி ரோஜா மலர்களை காண முடியும். இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

The post ஊட்டியில் நீர் பனி தாக்கம் அதிகரிப்பு; ரோஜா பூங்காவில் உதிர்ந்த மலர்கள்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Park ,rose ,Rose Park ,
× RELATED ரோஜா பூங்கா சாலையில் மரக்கிளைகள் அகற்றம்