×

வெள்ளத்தில் நீந்தி சென்று மக்களை மீட்ட வட்டாட்சியர்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பாலாற்று படுகையை ஒட்டி அமைந்துள்ள அவளூர் தரைப்பாலத்தில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஏரியின் உபரிநீர் கால்வாய்களில் பாலாற்று நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பஸ் நிலையம், என்ஜிஓ நகர், ஆசிரியர் நகர் உள்பட பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளக் காடாக மாறின. இதற்கிடையில் வாலாஜாபாத் பாலாற்று படுகையில் நேற்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாலாற்று குடிநீர் நீரேற்று நிலையம் செல்லும் சாலையை ஒட்டியுள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மார்பளவு வெள்ளநீர் சூழ்ந்ததால், அங்கிருந்த மக்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். இதையறிந்த வாலாஜாபாத் வட்டாட்சியர் லோகநாதன், சம்பவ இடத்துக்கு சென்று, மார்பளவு தண்ணீரில் நீந்தி சென்று, அவர்களை கயிறுகள் மூலம் மீட்டு வந்தார். இதனை பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்….

The post வெள்ளத்தில் நீந்தி சென்று மக்களை மீட்ட வட்டாட்சியர் appeared first on Dinakaran.

Tags : Walajahabad ,Kanchipuram district ,Aalur footbridge ,Walajahabad desert basin ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...