×
Saravana Stores

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் ரூ.6,000 நிவாரணத் தொகை… பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி!!

சென்னை: சென்னையில் வெள்ள நிவாரண நிதி ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது. இன்றில் இருந்து நாளை மறுதினம் (சனி) மாலை வரை வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்குவார்கள். காலை 50 முதல் 100 டோக்கன், மாலையில் 50 முதல் 100 டோக்கன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (17ம் தேதி) முதல் 21ம் தேதி (வியாழன்) வரை ரேஷன் கடைகளில் டோக்கனில் கொடுத்த தேதி, நேரத்துக்கு பொதுமக்கள் சென்று ரூ.6 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம். இந்த 5 நாட்களில் பெறாதவர்கள் 22ம் தேதி (வெள்ளி) ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.டோக்கன் கிடைக்காதவர்கள், உண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து அங்கேயே வழங்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் இரண்டு நகராட்சி அலுவலர்கள் இருப்பார்கள்.

ரேஷன் கடைகளுக்கு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

*வரும் ஞாயிற்று கிழமை முதல் நிவாரண தொகை வழங்க வேண்டும்
*ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நான்கு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும
*ஞாயிற்று கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும்
*டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும்,
*மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்த கூடாது
*டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் வரும் குடும்ப அட்டைதாரர்களை எக்காரணம் கொண்டும் ரொக்கத்
தொகை இல்லையென திருப்பி அனுப்பக்கூடாது.
* ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.
*நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
*தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் நிவாரண தொகை வழங்கப்படும்.

The post ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் ரூ.6,000 நிவாரணத் தொகை… பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி!! appeared first on Dinakaran.

Tags : Ration Stores ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது