×

பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் திருட்டு: எஸ்.பி.க்கள் ஆஜராகி விளக்கம்

மதுரை: பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் திருடு போன விவகாரம் தொடர்பான வழக்கில் தஞ்சை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜராகி ஆஜராகி விளக்கம் அளித்தனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 140 பள்ளிகளில் லேப்டாப் திருட்டு போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமாக உள்ள இலவச மடிக்கணினி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சையை சேர்ந்த சசிகலா ராணி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி ஆகியோர் அரசு தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். பள்ளியிலிருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச மடிக்கணினிகள் திருட்டு போன வழக்கு நிலுவையில் உள்ளதால் இருவரையும் ஓய்வு பெற அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து தங்களை ஓய்வு பெற அனுமதித்து ஓய்வூதியம் உள்ளிட்ட பணபலன்களை உத்தரவிடக்கோரி தனித்தனியே உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தஞ்சை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நீதிபதி உத்தரப்பவுப்படி தஞ்சை காவல் எஸ்பி மற்றும் மதுரை காவல் எஸ்பி ஆகியோர் நேரில் ஆஜராகினர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை 140 பள்ளிகளில் மடிக்கணினிகள் திருடு போனதாக புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. மடிக்கணினிகள் திருடு போனது தொடர்பாக தஞ்சையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் திருடிய நபர்களை கண்டறியவில்லை.

மேலும் 59 தலைமை ஆசிரியர்கள் மீத புகார்களில் அவர்களே பணம் செலுத்தியுள்ளதாக வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி ஏழை மாணவர்களை பயனுள்ள திட்டமான இலவச மடிக்கணினி திட்டத்தை இனிவரும் காலங்களிலாவது முறையாக செயல்படுத்த வேண்டும். இலவச மடிக்கணினி திருடு போனால் கண்டறியும் முறையில் அரசு கொடுக்க முயற்சிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

The post பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச மடிக்கணினிகள் திருட்டு: எஸ்.பி.க்கள் ஆஜராகி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Thanjavur ,District ,Superintendents ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...