×

சிக்கிமில் கடுமையான பனிப்பொழிவு; சிக்கி தவித்த 800 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு: ராணுவ முகாமில் தங்கவைப்பு

கேங்டாக்: சிக்கிமில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சிக்கி தவித்த 800 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர். சிக்கிமில் உள்ள ஏரிகள், பனி உச்சி மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகளின் பின்னணியில் உள்ள கண்கவர் இயற்கை அழகுகளை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஏராமானோர் வருகை தருவதுண்டு. இந்நிலையில், கிழக்கு சிக்கிமில் பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை நிலவி வருகிறது. அங்குள்ள உயரமான பகுதிகளில் பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுற்றுலா பயணிகள் 800க்கும் மேற்பட்டோர் சிக்கி தவித்தனர். அவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் படையினர் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை மீட்பு பணி தொடர்ந்தது.

பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு, அவர்களுக்கான தங்குமிடம், சூடான ஆடைகள், மருத்துவ உதவி மற்றும் சூடான உணவு ஆகியவை வழங்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ராணுவ வீரர்கள், தங்களது முகாம்களை காலி செய்தனர். ராணுவம் அளித்த உடனடி உதவிக்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

The post சிக்கிமில் கடுமையான பனிப்பொழிவு; சிக்கி தவித்த 800 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு: ராணுவ முகாமில் தங்கவைப்பு appeared first on Dinakaran.

Tags : Sikkim ,Gangtok ,Dinakaran ,
× RELATED பாஜ கூட்டணியில் இருந்து விலகல் சிக்கிம் முதல்வர் தமாங் 2 இடங்களில் போட்டி