×

சென்னையில் 4.5 லட்சம் பேர் பங்கேற்பு அரையாண்டு தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் இயங்கும் 32 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் சுமார் 1 கோடி மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதத்தில் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால், முதல் பருவத் தேர்வுகள் தாமதமாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தென் மேற்கு பருவமழை மற்றும் வட கிழக்கு பருவமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அடிகடி விடுமுறை அறிவிக்கப்பட்டதால், சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி வாரம் 6 நாட்கள் பள்ளிகள் நடந்தன. இந்நிலையில், வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. அதனால் அந்த மாவட்டங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 13ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 6 முதல் 10ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கியது. மதியம் 12 மணிக்கு தேர்வுகள் முடியும். பின்னர் மதியம் 1.30 மணிக்கு பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் தொடங்கி, மாலை 4.30 மணிக்கு முடியும். மேற்கண்ட தேர்வுகளில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர். சென்னை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,206 பள்ளிகளில் படிக்கின்ற 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2வில் மட்டும் மொத்தம் 52 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

The post சென்னையில் 4.5 லட்சம் பேர் பங்கேற்பு அரையாண்டு தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...