×

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்க அரசாணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப், தலைமை நிர்வாக அறங்காவலர் செய்யது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.இந்நிகழ்வில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்க அரசாணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Government ,Nagor Dargah Ganduri sandalwood festival ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu government ,Nagor Dargah Periya Andavar Kanduri Sandalwood Festival ,Nagor Dargah Kanduri Sandalwood Festival ,
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...