×

கடையநல்லூரில் ரஜினிகாந்த் பிறந்த நாள்

கடையநல்லூர், டிச.14: கடையநல்லூரில் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடையநல்லூர் கடைகாலீஸ்வரர் கோயிலில் காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பெரியபள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. நண்பகல் 11 மணிக்கு வடகரை அன்பு இல்லப் பயனாளிகள் 320 பேர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகர ரஜினிகாந்த் நற்பணி மன்ற நிர்வாகிகள் முருகானந்தம், சக்திகுமார், மக்தூம், மாரியப்பன், ஜமால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post கடையநல்லூரில் ரஜினிகாந்த் பிறந்த நாள் appeared first on Dinakaran.

Tags : Rajinikanth ,Kadayanallur ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...