×

கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் விஷம் சாப்பிட்ட கல்லூரி மாணவி

சேலம், டிச.14: சேலம் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மகள் ஸ்ருதி (19) தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கல்வி கட்டணமான 8 ஆயிரம் ரூபாய் கட்ட முடியாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் சாணி பவுடரை சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் விஷம் சாப்பிட்ட கல்லூரி மாணவி appeared first on Dinakaran.

Tags : Salem ,Mohankumar ,Salem Dadagapatti Moonangaradu ,Shruti ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை