×

சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதி

மோகனூர், டிச. 14: மோகனூர் ஒன்றியம் பரளி ஊராட்சி ஒத்தையூர் கிராமத்தில் சுமார் 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாய கூலிவேலை செய்து வருகின்றனர். கிராமத்தில் தெருக்களில் சாலை அமைக்காததால் மழைக்கு தூர்ந்து போய் செடிகள் முளைத்து புதர்மண்டி உள்ளது. விஷ பூச்சிகள் அதிகரித்துள்ளது. மேலும், சாக்கடை நூர்வாரப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். பொது கிணறு மூடப்படாமல், பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருக்களுக்கு கான்கிரீட் சாலை அமைத்துதர வேண்டும். சாக்கடையை தூர்வாரி கழிவுநீர் தேங்காதபடி செய்ய வேண்டும். மேலும், கிணற்றுக்கு இரும்பு வலை அமைத்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமம்) கீதா கூறுகையில், ‘ஒத்தையூர் கிராமத்தில் சாக்கடை கால்வயை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கான்கிரிட் சாலை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post சாலை வசதி இல்லாததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Mohanur ,Odayyur ,Parali panchayat ,Moganur ,Dinakaran ,
× RELATED தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு