×

₹1 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம், டிச.14: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 58 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கொங்கணாபுரம், அவிநாசி, கோவையை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹6,419 முதல் ₹7,129 வரையும், பி.டி. ரகம் பருத்தி குவிண்டால் ₹6,116 முதல் ₹7,129 வரையிலும், கொட்டு ரகம் பருத்தி குவிண்டால் ₹3,899 முதல் ₹4,819 வரையிலுமாக மொத்தம் ₹1 லட்சத்திற்கு ஏலம் போனது.

The post ₹1 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamuthram ,Tiruchengode Agricultural Producers Cooperative Marketing Society ,Dinakaran ,
× RELATED திருச்செங்கோட்டில் ₹1.90 கோடிக்கு மஞ்சள் விற்பனை