×

பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயற்சி

தர்மபுரி, டிச.14: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்ற மர்ம நபர்கள், வீட்டின் உரிமையாளர் வந்ததால், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள திருமலை நகரைச சேர்ந்தவர் ராஜன்(57). அதே பகுதியில் மாட்டு தீவன கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம், வீட்டுக்கு சாப்பிட சென்று விட்டு, மீண்டும் கடைக்கு திரும்பினார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு, அருகேயுள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார். மாலையில், ராஜனின் மனைவி வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அந்த நேரத்தில் வீட்டினுள் இருந்து 2 மர்மநபர்கள் வெளியே ஓடி வந்தனர். அவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுபற்றிய தகவலின் பேரில், சம்பவ இடம் வந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு நுழைந்த மர்மநபர்கள், ராஜனின் மனைவி வரும் சத்தம் கேட்டதும், அங்கிருந்து தப்பியோடி விட்டது தெரிந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் திருடு போகவில்லை. முன்னதாக, தாங்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக, வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஒயரை, மர்மநபர்கள் துண்டித்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயற்சி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Papriprettipatti ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு