×

8,700 ரயில்களில் ஆர்டிஐஎஸ் கருவி: மக்களவையில் அமைச்சர் தகவல்

தற்போது, 8,700 ரயில் இன்ஜின்களில் ரயில்களின் இருப்பிடம் மற்றும் வேகத்தை கண்காணிக்க உதவும் ரியல் டைம் ரயில் தகவல் அமைப்பு(ஆர்டிஐஎஸ்) பொருத்தப்படும் என மக்களவையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ஆர்டிஐஎஸ் திட்டம் குறித்து சஞ்சய் ஜெய்ஸ்வால்(பாஜ)கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,‘‘ நாடு முழுவதும் 14,000 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில்,60 சதவீத ரயில்களில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது’’என்று கூறினார்.

* முன்கள பணியாளர்களுக்கு முதலுதவி பயற்சி
ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து மக்களவையில் டேனிஷ் அலி கேள்வி கேட்டிருந்தார். அதற்கு எழுத்து மூலம் பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,ரயில்வேயின் முன்கள பணியாளர்களான ரயில் கார்டுகள்,டிக்கெட் பரிசோதகர், ரயில்நிலைய மேலாளர் ஆகியாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.நிபுணர் குழு பரிந்துரை அடிப்படையில், அனைத்து ரயில் நிலையங்கள், ரயில்களில் உயிர் காக்கும் மருந்துகள், கருவிகள் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

* மின் வாகன இறக்குமதிக்கு வரிசலுகை இல்லை
நாட்டில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதில் வரி சலுகைகள் கொடுக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் நேற்று மக்களவையில் தெரிவித்தார். ஒரு உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த அவர், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகைகள் மற்றும் உள்ளூர் மதிப்புக் கூட்டலில் இருந்து விலக்கு அளிக்கும் எந்தவொரு திட்டத்தையும் பரிசீலிக்கவில்லை என தெரிவித்தார்.

The post 8,700 ரயில்களில் ஆர்டிஐஎஸ் கருவி: மக்களவையில் அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப்...