×

கேரள பாஜ துணைத் தலைவராக நடிகர் தேவன் நியமனம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் பிரபல நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் தேவன். மலையாளத்தில் நாயகனாகவும், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் பாட்ஷா உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் கேரள மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்தி வந்தார். சமீபத்தில் இவர் தன்னுடைய கட்சியை பாஜவுடன் இணைத்து அக்கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில் நடிகர் தேவன் கேரள மாநில பாஜ துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

The post கேரள பாஜ துணைத் தலைவராக நடிகர் தேவன் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Devan ,Kerala BJP ,Vice President ,Thiruvananthapuram ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!