×

லாட்ஜில் ரூம் போட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை மாணவி தற்கொலை முயற்சி: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்; மேலும் பல மாணவிகள் அளித்துள்ள புகாரால் பரபரப்பு

காலாப்பட்டு: லாட்ஜில் ரூம் போட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால், மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூரையொட்டிள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய், மாணவியை மீட்டு விசாரித்தார். அப்போது, பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வரும் மகேஸ்வரன் (38), அரசு விழா நடப்பதாக கூறி விழுப்புரத்திற்கு அழைத்துச் சென்றார்.

பின்னர், அங்குள்ள தனியார் லாட்ஜூக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது, ‘பல மாணவிகள் சம்மதித்த நிலையில் நீ மட்டும் சம்மதிக்க மறுப்பது ஏன்?’ என கேட்டு வலுகட்டாயமாக ஆசிரியர் மகேஸ்வரன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இதே நேரத்தில் தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகள் அடுத்தடுத்து பள்ளிக்கு வந்து ஒரே மாதிரியாக புகார் அளித்தனர். ஆத்திரமடைந்த மாணவிகளின் உறவினர்கள் தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனை சரமாரியாக தாக்கி வானூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ‘விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் கடந்த ஆண்டுதான் இப்பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார். இவரது மனைவியும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க மாணவிகளை மகேஸ்வரன் ஆர்வமுடன் அழைத்துச் சென்று வந்துள்ளார். அப்போது பல மாணவிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இவரது செல்போனை ஆய்வு செய்த போலீசார், அதில் தமிழ் ஆசிரியர் மகேஸ்வரனின் நிர்வாண படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின்பேரில் ஆசிரியர் மகேஸ்வரனை போலீசார் கைதுசெய்து விசாரிக்கின்றனர்.

The post லாட்ஜில் ரூம் போட்டு ஆசிரியர் பாலியல் தொல்லை மாணவி தற்கொலை முயற்சி: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பெற்றோர்; மேலும் பல மாணவிகள் அளித்துள்ள புகாரால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kalapattu ,
× RELATED தூண்டில் வளைவு அமைக்கக்கோரி...