×

வரத்து இருமடங்காக அதிகரிப்பு ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ ரூ.20க்கு விற்பனை

ஈரோடு: ஈரோடு தினசரி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து இருமடங்காக உயர்ந்ததால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, தர்மபுரி, ஓசூர், ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து இருந்து வருகிறது. தக்காளி விளைச்சல் அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக ஈரோடு தினசரி மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை மார்க்கெட்டிற்கான தக்காளி வரத்து இருமடங்காக உயர்ந்தது. வழக்கமாக 3 ஆயிரம் பெட்டிகள் வரத்து இருந்து வந்த நிலையில், இன்று காலை 6 ஆயிரம் பெட்டிகளாக உயர்ந்தது. இதனால் விலையும் வீழ்ச்சியடைந்தது. நேற்று முன்தினம் பெரிய பெட்டி தக்காளி ரூ.600க்கு விற்ற நிலையில் இன்று ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், சிறிய பெட்டிகள் ரூ.200 முதல் ரூ.150 வரையிலும் விற்பனையானது. ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post வரத்து இருமடங்காக அதிகரிப்பு ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி: கிலோ ரூ.20க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Erode ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு...