×

19 வயது ‘இன்ஸ்டா’ பிரபலம் உயிரிழப்பு: அறுவை சிகிச்சை செய்த 48 மணி நேரத்தில் சோகம்

பிரேசிலியா: கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 48 மணி நேரத்தில், இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மரியா சோபியா வலிம் (19), தனது இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கத்தில் தினமும் புகைப்படம் பதிவிடுவது, வீடியோ வெளியிடுவது என இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தனது உடற்பயிற்சி, மேக் அப் உள்ளிட்டவைகள் பற்றியும் தான் எந்த வித பிராண்ட் உபயோகிப்பேன் என்பது பற்றியும் விளம்பரமும் செய்து வந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் இந்த பெண் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த காரணத்தினால், இவருக்கு நாளுக்கு நாள் பின்தொடர்பவர்கள் அதிகரித்த வண்ணமாக இருந்தது.

இந்த சூழலில் இவருக்கு அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரலில் பிரச்னை என்றும், விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து இவருக்கு கல்லீரல் வழங்க கொடையாளர் முன்வந்தார். பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற வெற்றிகரமாக முடிந்துவிட்டது. மருத்துவ கண்காணிப்பில் இருந்த அவருக்கு, திடீரென சுவாச பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அறுவை சிகிச்சை நிறைவடைந்து 48 மணி நேரத்தில் மரியா உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் இன்ஸ்டா பிரபல பெண் ஒருவர் உயிரிழந்ததற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது தந்தை சியாராவில் உள்ள காசியாவின் மேயராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 19 வயது ‘இன்ஸ்டா’ பிரபலம் உயிரிழப்பு: அறுவை சிகிச்சை செய்த 48 மணி நேரத்தில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Brasília ,Brazil… ,
× RELATED பிரேசிலில் வெள்ளப்பெருக்கில்...