×

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி.20 போட்டி: ரஸ்சல் அதிரடியில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வெஸ்ட்இண்டீஸ் கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 5 டி.20 போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதல் டி.20 போட்டி பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து 19.3 ஓவரில் 171 ரன் எடுத்து ஆல்அவுட் ஆனது.

பில் சால்ட் 40 (20 பந்து), கேப்டன் பட்லர் 39, லிவிங்ஸ்டன் 27, வில்ஜாக் 17 ரன் அடித்தனர். வெ.இண்டீஸ் பவுலிங்கில் ஆண்ட்ரே ரஸ்சல் , அல்சரி ஜோசப் தலா 3 ,ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் பிராண்டன் கிங் 22, கைல் மேயர்ஸ் 35, சாய் ஹோப் 36, நிக்கோலஸ் பூரன் 13, ரன் எடுத்து வெளியேற, ஆட்டம் இழக்காமல் கேப்டன் ரோவ்மேன் பவல் 31 (15 பந்து, 3 பவுண்டரி,2 சிக்சர், ரஸ்சல் 29ரன் (14 பந்து, 2 பவுண்டரி,2 சிக்சர்) விளாசினர். 18.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2 ஆண்டுக்கு பின் அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரஸ்சல் 3விக்கெட் வீழ்த்தியதுடன் பேட்டிங்கில் 29 ரன் விளாசிய ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது டி.20 போட்டி நாளை நடக்கிறது.

The post இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி.20 போட்டி: ரஸ்சல் அதிரடியில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : First T20 ,England ,West Indies ,Russell ,Bridgetown ,T20I ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...