×

நடப்பாண்டில் நாளை கடைசி முகூர்த்த நாள் என்பதால் மதுரை, நெல்லையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை..!!

மதுரை: மதுரையில் மல்லிகை பூ இந்த ஆண்டு உச்சகட்ட விலையாக ஒரு கிலோ ரூ.3000க்கு விற்பனையாகிறது. நாளை இந்த ஆண்டின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. நடப்பாண்டில் உச்சபட்ச விலையாக ஒரு கிலோ மல்லிகை பூ விலை ரூ.3,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் மலர் சந்தைக்கு உற்பத்தியாகும் பூக்கள் விற்பனைக்காக வரும்.

மேலும் அதுமட்டுமின்றி அண்டை மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனையானது நடைபெறும். நாளை இந்த ஆண்டு கடைசி முகூர்த்த நாலா என்பதால் நேற்று ரூ.1,500க்கு விற்பனையான மல்லிகை பூவின் விலை இன்று ரூ.3,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் முல்லை பூ நேற்று ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.1,000க்கு விற்பனையாகிறது. கனகாம்பரம் பூ மற்றும் பிச்சி பூ நேற்று ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது. செண்டுமல்லி ரூ.500க்கும், பன்னீர் ரோஸ் ரூ.500க்கும், சம்மங்கி பூ ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், பொதுமக்கள் பூக்களை வாங்க முடியாத சூழலே நிலவி வருகிறது.

The post நடப்பாண்டில் நாளை கடைசி முகூர்த்த நாள் என்பதால் மதுரை, நெல்லையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Tags : Mukurtha day ,Madurai ,Mugurtha day ,Madurai, Nellai ,
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாள்...