×

தெலங்கானாவில் வயல்வெளியில் இறங்கி விபத்துக்குள்ளான பஸ்

*படிக்கட்டில் தொங்கியவர்கள் காயம்

திருமலை : தெலங்கானா மாநிலம் ஹனுமகொண்டாவில் இருந்து வாரங்கல் 2 பணிமனையை சேர்ந்த ஆர்டிசி பஸ் ஏத்தூர் நகரத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்தது.
ஒகுலாப்பூரில் சென்று கொண்டிருந்தபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் லேசான காயம் அடைந்தனர். மேலும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்தவர்கள் வயல்வெளியில் விழுந்தனர். இவர்களில் படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஸ் விபத்து குறித்து வாரங்கல் பணிமனை மேலாளர் சுரேஷ் கூறுகையில், ‘டிரைவர் திடீரென பிரேக் போட்டதால், பஸ் வயல்வெளிக்குள் சென்றது. அதிக பாரம் ஏற்றியதாலும், படிக்கட்டுகளில் பயணிகள் இருந்ததாலும் விபத்து நேர்ந்ததாக டிரைவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post தெலங்கானாவில் வயல்வெளியில் இறங்கி விபத்துக்குள்ளான பஸ் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Warangal 2 ,Hanumakonda, Telangana ,
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...