×

தொட்டபெட்டா சின்கோனா பண்ணையில் ரோஸ்மேரி நாற்று உற்பத்தி தீவிரம்

ஊட்டி : தொட்டபெட்டா சின்கோனா பண்ணையில் ரோஸ்மேரி நாற்று உற்பத்தியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டாவில், சின்கோனா மூலிகை பண்ணை உள்ளது. இங்கு பல்வேறு ரோஸ்மேரி, தைம், லெமன்கிராஸ், ஜெரோனியம் உட்பட பல்வேறு வகையான மூலிகை செடிகள், வாசனை திரவியம் உற்பத்தி செய்யும் தாவரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர யூகலிப்டஸ் தைலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான மூலிகை தாவரங்கள் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், பல்வேறு வகையான மூலிகை தைலங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்காகவும், ரோஸ்மேரியில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் உற்பத்தி செய்வதற்காக தற்போது சின்கோனா பண்ணையில் உள்ள நிழல்வலை கூடாரங்களில் பல லட்சம் ரோஸ்மேரி நாற்றுகள் உற்பத்தி செய்வதில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நாற்று தயாரானவுடன், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இவைகள் விற்பனை செய்யப்படும் என தெரிவித்தனர்.

The post தொட்டபெட்டா சின்கோனா பண்ணையில் ரோஸ்மேரி நாற்று உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Totabeta ,Ooty ,Dottapetta Cinchona Farm ,Tottapetta ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...