×

திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சம்பவம்; எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பதா?.. அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சென்னை: ஸ்ரீரங்கம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதனிடையே சென்னை சேத்துபட்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு; ஸ்ரீரங்கம் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. ஸ்ரீரங்கம் பிரச்சினை, பக்தர்கள் – அங்கு பணியாற்றிய காவலர்கள் இடையேயான பிரச்சினை.

நேற்றே பக்தர்கள், பணியாளர்கள், அர்ச்சகர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு எட்டப்பட்டுவிட்டது. சந்தர்ப்ப சூழல் காரணமாக நடக்கும் பிரச்சனைகளுக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் சாயம் பூசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்; எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பதா? மழை பாதிப்பை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்தார் அது நடக்கவில்லை என்பதால் தற்போது ஸ்ரீரங்கம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று ஆந்திர பக்தர்கள்- காவலர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்ட விவகாரத்தில் கோயில் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர பக்தர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சம்பவம்; எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பதா?.. அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி appeared first on Dinakaran.

Tags : Trichy Srirangam Temple ,Minister ,Sekharbhabu ,Annamalai ,Chennai ,Srirangam ,Hindu Religious Affairs ,Trinchi Srirangam Temple ,Shekarbabu ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...