×

நூறுநாள் வேலையை நிறுத்தினால் எனக்கு டிரான்ஸ்பர் உறுதி-விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் கலகல

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் வேளாண் இணை இயக்குநர் உத்தண்டராமன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:அணைக்கரைப்பட்டி கருப்பையா: கோல்வார்பட்டி, இருக்கன்குடி, ஆணைக்குட்டம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட அணைகளுக்கு மழை பெய்தாலும் மழைநீர் வருவதில்லை. வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். மாவட்டத்தில் பல நூறு கண்மாய்களுக்கும் தண்ணீர் வருவதில்லை, உரிய ஆய்வு நடத்தி தூர்வார வேண்டும்.கடம்பன்குளம் விவசாயி: கடம்பன்குளம் கண்மாயில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கரையை தோண்டி குழாய் பாதிக்கின்றனர். கண்மாய் கரை பாதிக்கப்படும் என்பதால், தடுத்து நிறுத்த வேண்டும்.இதற்கு கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.ராமச்சந்திரராஜா: உரத்தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு, தனியார் உரக்கடைகளில் பல அரசு கொள்கைக்கு மாறாக செயல்பட்டு வருகின்றன. உரக்கடைகளில் பயிற்சி பெற்றவர்கள் தான் விற்பனையாளர்களாக நியமிக்க வேண்டுமென விதிமுறை இருந்தாலும், படிக்காதவர்களை வைத்து தேவையற்ற பூச்சிக்கொல்லிகளை விவசாயிகளிடம் விற்பனை செய்கின்றனர். தனியார் கடைகளுக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும். பிளவக்கல், பெரியார், சாஸ்தா கோவில் அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.இதற்கு கலெக்டர், பிளவக்கல், பெரியார், சாஸ்தா அணைகளில் இருந்து பாசனத்திற்கு ஞாயிறு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்தார்.நாராயணசாமி: நூறுநாள் வேலை திட்டத்தால் விவசாயத்திற்கு கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. 2 மாத காலத்திற்கு நூறுநாள் வேலை திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.இதற்கு கலெக்டர், அரசின் கொள்கை, திட்டங்களில் மாவட்ட நிர்வாகம் தலையிட முடியாது. 3 மாதம் ஒத்தி வைத்தால், என்னை டிரான்ஸ்பர் செய்து விடுவார்கள், என்றார். விவசாயிகள்: கண்மாய்களில் மீன்,பாசி குத்தகை முறையை நிறுத்த வேண்டும். குத்தகை எடுத்தவர்கள் தண்ணீரை திறக்க மறுப்பதும், மீன்கள் வளர்ந்ததும் தண்ணீரை திறப்பதுமாக தேவையற்ற நடைமுறைகளை செய்து வருகின்றனர். தற்போது ஒராண்டு குத்தகையை 5 ஆண்டுகளுக்கு மாற்றி உள்ளனர். இதனால் கண்மாய்கள் குத்தகைதாரர்கள் கட்டுப்பாட்டில் சென்று விடும். கண்மாய்களில் மீன்வளர்ப்பு நடைமுறையை கைவிட வேண்டும்.இதற்கு கலெக்டர், கண்மாய்களில் மீன்வளர்ப்பு தொடர்பான குற்றச்சாட்டு கவனத்திற்கு வந்துள்ளது, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.விஜயமுருகன், ஆனைக்குட்டம் அணை ஷட்டர் பிரச்னையால் 1989 முதல் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. பல கோடி செலவிட்டும் பயன்கிடைக்கவில்லை. தற்போது 23.50 கோடியில் பழுது பார்க்க இருப்பதாக கூறுகின்றனர். இந்த அமைப்பில் எத்தனை கோடி செலவிட்டாலும் பயன்கிட்டாது. 32 ஆண்டுகளாக தண்ணீரை தேக்கி வைக்க முடியாத அணையின் அமைப்பை மாற்ற வேண்டும்.கலெக்டர், ஆனைக்குட்டம் அணையின் அமைப்பினை மாற்றுவது தொடர்பாக ஆய்வுகள், அறிக்கைகளை பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர். விரைவில் அணையை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மாற்றம் செய்யப்படும், என்றார்.  இவ்வாறு விவாதம் நடந்தது.இக்கூட்டத்தில் புலிகள் காப்பாக துணை இயக்குநர் டாக்டர் திலீப்குமார், இணைப்பதிவாளர் செந்தில்குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post நூறுநாள் வேலையை நிறுத்தினால் எனக்கு டிரான்ஸ்பர் உறுதி-விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் கலகல appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Meganathareddy ,
× RELATED சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்ததே...