×

‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2வது நாளாக இன்றும் ஆய்வு நடத்துகிறது ஒன்றிய குழு.!

சென்னை: தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை. செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை ஈடு செய்யும் வகையில், இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 450 கோடியும், சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து 561 கோடி ரூபாயும் மத்திய அரசு விடுவித்தது.

இந்த சூழலில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது.சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, பட்டாளம், வேளச்சேரி, மடிப்பாக்கம், நாராயணபுரம் ஏரி, மேடவாக்கம், வடபெரும்பாக்கம், மணலி, செம்மஞ்சேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் குழு ஆய்வு செய்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை 2வது நாளாக 6 பேர் கொண்ட ஒன்றியக் குழு இன்று ஆய்வு செய்கிறது நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்திய பின் டெல்லி செல்லும் ஒன்றியக் குழு, அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்பிக்க உள்ளது.

The post ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2வது நாளாக இன்றும் ஆய்வு நடத்துகிறது ஒன்றிய குழு.! appeared first on Dinakaran.

Tags : MIKJAM' ,EU COMMITTEE ,CHENNAI ,Tamil Nadu ,Mikjam ,BENGALPATTU ,Kanchipuram ,Thiruvallur ,Mikjam' Storm ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...