×

மண்வள தின முகாம்

 

காரைக்குடி, டிச. 13: காரைக்குடி அருகே கல்லல் வேப்பங்குளத்தில் வேளாண்மை துறை சார்பில் மண்வள தின சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சித்ராகணேசன் தலைமை வகித்தார். வேளாண்மை துணை இயக்குநர் சுருளிமலை துவக்கிவைத்து பேசுகையில், மண்ணில் உள்ள களர், உவர், அமிலத்தன்மையை கண்டறிந்து அதற்கேற்ற பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்ய வேண்டும். மண் பரிசேதனை செய்வதால் மண்ணில் உள்ள ஊட்டச்சத்து சிலவரம் விவசாயிகளுக்கு தெரியவரும். அதற்கு ஏற்ப பயிர்களை பயிர் செய்யலாம் என்றார்.

வேளாண்மை உதவி இயக்குநர் அழகுராஜா பேசுகையில், இயற்கை உரங்களான தொழுஉரம், தழை உரம் இடுவது மற்றும் வடிகால் வசதி பெருக்குதல், சுண்ணாம்பு சத்து இல்லாத நிலத்திற்கு ஏக்கருக்கு 500 கிலோ ஜிப்சம் இடுதல் மற்றும் அமில நிலச்சீர்திருத்தம், உவர் நிலச்சீர்திருத்தம் போன்றவை குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். சேதுபாஸ்கரா வேளாண்கல்லூரி உதவி பேராசிரியர் கருப்புராஜா, துணை வேளாண்மை அலுவலர் சேகர், வேளாண்மை அலுவலர் ரகுபதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மண் ஆய்வு எடுப்பதன் முறைகள். அதன் பயன்கள், எவ்வாறு உரம் இடுவது, என்னென்ன உரங்கள் இடுவது போன்றவை விளக்கப்பட்டது. விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது.

The post மண்வள தின முகாம் appeared first on Dinakaran.

Tags : Soil Day Camp ,Karaikudi ,Soil Day Special ,Kallal Veppangulam ,Department of Agriculture ,Dinakaran ,
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...