×

அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு விளக்கம்

 

பந்தலூர், டிச.13: பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி மாவட்ட கிளை சார்பாக வான்நோக்கல் நிகழ்ச்சி மற்றும் தொலைநோக்கி அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ப்ளோரா குளோரி தலைமை தாங்கினார். பள்ளி வானவில் மன்ற பொறுப்பாசிரியர் மணிவாசகம் முன்னிலையில் வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் தொலைநோக்கி மற்றும் செயல்பாடுகள் குறித்து தொலைநோக்கி பயிற்சி பெற்ற அறிவியல் இயக்க நிர்வாகிகள் கருணாநிதி மற்றும் சரவணன் ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். மாணவர்கள் வான்வெளி நிகழ்வுகளை தொலை நோக்கி மூலம் பார்வையிட்டனர். ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Science Movement ,Bandalur ,Tamil Nadu Science Movement Nilgiris District ,Kariyacholai Government High School ,Dinakaran ,
× RELATED தொடர் கோரிக்கை வைத்தும் அம்மன்காவு...