×

மார்கழி பிறப்பையொட்டி அழகர்கோயில் நடை திறப்பில் மாற்றம்

 

அழகர்கோவில், டிச.13: மார்கழி மாத பிறப்பையொட்டி அழகர்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அழகர்கோயில் துணை ஆணையர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: மார்கழி மாத பிறப்பையொட்டி அழகர்கோயில் மற்றும் அதன் உபகோயில்களின் நடை திறப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற டிச.17ம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14ம் தேதி வரை அழகர்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் பகல் 12 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார் கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கோயிலின் உப கோயில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் மற்றும் வண்டியூர் வீரராகவ பெருமாள் ஆகிய கோயில்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 11.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடைமுறை மார்கழி மாதம் 30 நாட்கள் மட்டும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மார்கழி பிறப்பையொட்டி அழகர்கோயில் நடை திறப்பில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Alaghar ,Margazhi ,Alagharkoil ,
× RELATED மலைக்கு புறப்பட்டார் அழகர்