×

அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

 

சத்தியமங்கலம், டிச.13: அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். நேற்று அமாவாசை தினம் என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி குண்டத்திற்கு உப்பு, மிளகு தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பண்ணாரி அம்மனை வழிபட்டனர். அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். அமாவாசையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

The post அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Pannari Amman Temple ,Amavasai ,Sathyamangalam ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...