×

பெயரை மாற்றிய பீலா

சென்னை: பெண் ஐஏஎஸ் அதிகாரி தனது பெயருக்கு பின்னால் உள்ள கணவரின் பெயரை மாற்றி தந்தையின் பெயரை வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்சாரத்துறையின் செயலாளராக இருப்பவர் பீலா ராஜேஷ். இதில் ராஜேஷ் என்பது அவரது கணவரின் பெயர். கணவர், எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக பணியாற்றியவர். பின்னர் பெண் எஸ்பியிடம் தவறாக நடக்க முயன்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டு, அந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். இதனால் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர். இந்த விவகாரத்துக்குப் பிறகு கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என்று இப்போது மாற்றம் செய்துள்ளார். வெங்கடேசன் அவரது தந்தையின் பெயர். பெண் ஐஏஎஸ் அதிகாரி தனது பெயரை மாற்றம் செய்தது ஐஏஎஸ், ஐபிஎஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பெயரை மாற்றிய பீலா appeared first on Dinakaran.

Tags : Beela ,Chennai ,IAS ,
× RELATED திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி...