×

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.1000 கோடி மதிப்பில் கொரில்லா கண்ணாடி ஆலை: அமெரிக்க நிறுவனம் அமைக்கிறது

சென்னை: இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான், பெகாட்ரன், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய 3 நிறுவனங்களும் சென்னையில் இயங்கி வருகின்றன. அந்தவகையில் இந்த நிறுவனங்களுக்கு துணையாக ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் டிஸ்பிளே கிளாஸ் தயாரிக்கும் அமெரிக்காவின் பிரபலமான கொர்னிங் நிறுவனம் சென்னையில் புதிய உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது. அதன்படி, ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கொரில்லா கண்ணாடி ஆலையை சென்னைக்கு அருகே பெரம்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

கொர்னிங் நிறுவனம் தயாரிக்கும் கொரில்லா கிளாஸ் அதிநவீன முறையில் அதிகளவில் ஆட்டோமேட் செய்யப்பட்ட கட்டமைப்பில் இயங்கக்கூடியது. இந்த தொழிற்சாலை அமையும் பட்சத்தில் 300 பேர் வேலை வாய்ப்பு பெறுவர். ஏற்கனவே தெலங்கானாவில் ஆலையை கொர்னிங் அமைக்கும் என கூறப்பட்ட நிலையில் தமிழ்நாட்டை அந்த நிறுவனம் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் கொர்னிங் நிறுவனம் தனது இந்திய கூட்டாளியான Optiemus Infracom உடன் இணைந்து நிர்வாகம் செய்ய உள்ளதால், இந்தத் தொழிற்சாலை மூலம் வருடத்திற்கு 30 மில்லியன் கொரில்லா கிளாஸ் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதம் நடைபெறும் குளோபல் இன்வெஸ்டர் மீட் கூட்டத்தில் வெளியாகும் என தெரிகிறது.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.1000 கோடி மதிப்பில் கொரில்லா கண்ணாடி ஆலை: அமெரிக்க நிறுவனம் அமைக்கிறது appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,US ,Chennai ,Apple ,India ,Boxcon ,Bekadran ,Tata Electronics ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...