×

டெல்லி காவல் ஆணையருடன் எப்பிஐ இயக்குநர் சந்திப்பு

புதுடெல்லி: கனடாவில் கடந்த ஜுன் மாதம் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார் இதற்கு இந்தியாவே காரணம் என கனடா குற்றம்சாட்டியது. இதேபோல் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் குடியுரிமை பெற்ற காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் என்பவரை நியூயார்க்கில் வைத்து கொலை செய்ய இந்திய அதிகாரியுடன் சேர்ந்து நிகில் குப்தா என்ற இந்தியர் முயற்சி செய்ததாக அமெரிக்கா அண்மையில் குற்றம்சாட்டியது. இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்க புலனாய்வு அமைப்பின் இயக்குநர் கிறிஸ்டோபர் ரே நேற்று முன்தினம் இந்தியா வந்தார். டெல்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்துக்கு சென்ற அவர் சிபிஐ இயக்குநர் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் நேற்று டெல்லி காவல்துறை தலைமையகத்துக்கு சென்ற கிறிஸ்டோபர் ரே, டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்தார்.

The post டெல்லி காவல் ஆணையருடன் எப்பிஐ இயக்குநர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : API ,Delhi Police Commissioner ,New Delhi ,India ,Hardeep Singh Nijjar ,Canada ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு