×

பைபர் நெட் ஊழல் வழக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை

புதுடெல்லி: தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு திறன்மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து பைபர் நெட் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்திரபாபு நாயுடு மீது போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சந்திரபாபு நாயுடுதாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்த வழக்கை வரும் ஜனவரி 14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்யவும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரா மாநில அரசு ஆகியோர் வழக்கு தொடர்பாக எந்தவொரு அறிக்கையோ கருத்துக்களையோ தெரிவிக்க கூடாது என்று நிபந்தனை விதித்தது.

The post பைபர் நெட் ஊழல் வழக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chandrababu Naidu ,New Delhi ,Telugu Nation ,AP ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு