×

வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் இலவச நிலவேம்பு குடிநீர் ஆட்டோக்களில் விநியோகம்

சென்னை: .மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இம்ப்காப்ஸ் நிறுவனத்தின் சார்பில் நிலவேம்பு குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் பாக்கெட்கள் 50 ஆட்டோக்கள் மூலம் சென்னை முழுவதும் பொது மக்களுக்கு வழங்குவதற்கான நிகழ்வினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கொடியைசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: வெள்ளம் அதிகம் பாதித்த தென் சென்னை பகுதிகளில், சைதாப்பேட்டை அடையாறு கரையோரம், விருகம்பாக்கம் அடையாறு கரையோரம், வேளச்சேரியில் அடையாறு கரையோரம், சோழிங்கநல்லூரில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து திறந்து விடப்பட்ட மழைநீரால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மதுரவாயல் பகுதி மக்களுக்கு 50 ஆட்டோக்கள் மூலம் நிலவேம்பு குடிநீர், நிலவேம்பு குடிநீர் பாக்கெட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் தமிழ்நாட்டில் 1,542 சித்த மருத்துவ மையங்கள் இருக்கின்றது. இம்மையங்களுக்கு ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. ஒன்றிய அரசின் சார்பில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு ‘சிறந்த சேவை’ (Best Performing State) விருது வழங்கியிருக்கிறார்கள். 2 நாட்களில் தமிழ்நாடு முதல்வரிடம் அதை காண்பித்து அலுவலர்கள் வாழ்த்து பெறுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் இலவச நிலவேம்பு குடிநீர் ஆட்டோக்களில் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Nilvavembu ,CHENNAI ,Nilvembu ,IMPCOPS ,Mikjam ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...