×

தென் ஆப்ரிக்காவுடன் 2வது டி20 கேப்டன் ‘ஸ்கை’, ரிங்கு அதிரடி

எபேஹா: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங் இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர்.
தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டர்பனில் நடக்க இருந்த முதல் போட்டி, கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், 2வது போட்டி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் மார்க்ரம் முதலில் பந்துவீச முடிவு செய்தார். யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் இணைந்து இந்திய இன்னிங்சை தொடங்கினர். இருவருமே ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்ப, இந்தியா 2 ஓவர் முடிவில் 6 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. எனினும், திலக் வர்மா – கேப்டன் ‘ஸ்கை’ ஜோடி நம்பிக்கையுடன் அடித்து விளையாட, இந்திய ஸ்கோர வேகமாக உயர்ந்தது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தனர்.

திலக் வர்மா 29 ரன் (20 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி கோட்ஸீ பந்துவீச்சில் யான்சென் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரிங்கு சிங் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, பவுண்டரியும் சிக்சரும்மாகப் பறக்கவிட்ட சூரியகுமார் 29 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தது. சூரியகுமார் 56 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஷம்சி சுழலில் யான்செனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு அதிரடியை தொடர்ந்த ரிங்கு சிங் தன் பங்குக்கு 30 பந்தில் அரை சதம் விளாசி அசத்தினார். ஜிதேஷ் ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். கடைசி கட்டத்தில் ஜடேஜாவும் அதிரடியில் இறங்க இந்திய ஸ்கோர் வேகம் எடுத்தது.

 

The post தென் ஆப்ரிக்காவுடன் 2வது டி20 கேப்டன் ‘ஸ்கை’, ரிங்கு அதிரடி appeared first on Dinakaran.

Tags : T20 ,Sky ,Ringu ,South Africa ,Ebeha ,Suryakumar Yadav ,Ringu Singh ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்...