×

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா

கோலாலம்பூர்: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. மலேசியாவில் நடந்து வரும் இந்த தொடரின் காலிறுதியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியுடன் நேற்று மோதிய இந்தியா, கடுமையாகப் போராடி 4-3 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய வீரர்கள் ஆதித்யா அர்ஜுன் லாலாகே (34வது நிமிடம்), அரைஜீத் சிங் ஹுண்டால் (35’), சவுரவ் ஆனந்த் குஷ்வஹா (52’), கேப்டன் உத்தம் சிங் (57வது நிமிடம்) ஆகியோர் அபாரமாக கோல் அடித்தனர். நெதர்லாந்து சார்பில் டிமோ போயர்ஸ் (5’), பெபின் வாண்டெர் ஹெய்டன் (16’), ஒலிவியர் ஹார்டென்சியஸ் (44வது நிமிடம்) கோல் போட்டனர். நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா – ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.

 

The post ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : Junior World Cup Hockey ,India ,KUALA LUMPUR ,Team India ,Malaysia… ,Junior World Cup of Hockey ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2...