×

மாவட்டம் முழுவதும் 70 கால்நடை சிறப்பு முகாம்கள்: 15 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சை

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 70 கால்நடை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 15 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை மற்றும் மிக்ஜாம்’ புயலால் கடந்த, 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. திருத்தணி வருவாய் கோட்டத்திலும் கனமழை பெய்தது. இதனால், கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் செய்தூன் மேற்பார்வையில், திருத்தணி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் தாமோதரன் தலைமையில், கடந்த, 7ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ராஜநகரம், தும்பிகுளம், சிங்கராஜபுரம், கண்டவாரிகுப்பம், திருநாதராஜபுரம், திருவாலங்காடு, பெரியராமாபுரம், ராமசமுத்திரம், வி.கே.என்.கண்டிகை, ஏ.எம்.பேட்டை, முருக்கம்பட்டு மற்றும் வெங்கடராஜிகுப்பம் ஆகிய கிராமங்களில் வெள்ள நிவாரண கால்நடை சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் மருத்துவ குழுக்கள் பங்கேற்று, கால்நடைகளுக்கு பல்வேறு விதமான சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டன. இதேபோல், திருவள்ளூர் மற்றும் பொன்னேரி ஆகிய கோட்டங்களிலும் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கால்நடை சிறப்பு முகாம்கள் நடந்தன. அதன்படி மாவட்டம் முழுவதும் 70 முகாம்களில் 15 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.

The post மாவட்டம் முழுவதும் 70 கால்நடை சிறப்பு முகாம்கள்: 15 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Tiruvallur district ,Tiruvallur… ,
× RELATED ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான...