×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கபட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்த வழக்கை மனுத உரிமை ஆணையம் முடித்து வைத்த உத்தரவை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி தீபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதிகள் நிஷா பானு மற்றும் மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்க பட்டதாக தெரிவிக்கபட்டது.

மனு தாரர் ஹென்றி தீபேன் ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக சிபிஐ தக்கல் செய்த குற்ற பத்திரிக்கை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்ரம் நிராகரித்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையை ஏற்றுகொண்ட அரசு சம்பந்தபட்ட அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்தாத நிலையில், இந்த வழக்கை மீண்டும் சிபிஐ விசாரிக்க அனுமதிக்க கூடாது என்றும், தமிழ்நாடு அரசு சிரப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

அப்போது நீதிபதிகள் ஒரே ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றபத்திரிக்கை தக்கல் செய்துவிட்டு மற்ற காவல்துறையினருக்கு எதிரான எவ்வாறு நற்சான்று வழங்கபட்டது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு குற்றபத்திரிக்கையை சிபிஐ தரப்பு நிராகரித்ததன் காரணமாக வழக்கு மீண்டும் விசாரிக்கபடும் என்றும், சிபிஐ விசாரணையில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவிக்கபட்டது.

துப்பக்கிசூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி அடையாளம் காட்டிய அதிகாரிகளுக்கு எதிரக நடவடிக்கை எடுக்கபட்டதா அல்லது நடவடிக்கை கைவிடபட்டதாக என சிபிஐ விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் சிபிஐ விசாரணையின் அறிக்கை நகலை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து சிபிஐ விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICOURT ,CBI ,TOTHUKUDI RIFLE ,Chennai ,Chennai High Court ,Tuthukudi ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...