×

மிக்ஜாம் புயலால் காணாமல் போன சாலை: மணலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து காட்டுபள்ளி செல்லும் சாலையில் மணல் திட்டுகள் முற்றிலுமாக மூடபட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். வடசென்னை அனல் மின் நிலையம், அதானி துறைமுகம், காமராஜர் துறைமுகம், L&T கப்பல் கட்டும் தளம் என பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பழவேற்காடை சுற்றியுள்ள மக்கள் பழவேற்காடு – காட்டுபள்ளி சாலையில் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில், சிந்தாமணி குப்பம் என்ற பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன்பாக பழைய முகத்துவாரம் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. கடலுக்கும் ஏரிக்கும் நடுவில் இந்த பழவேற்காடு – காட்டுபள்ளி சாலை அமைந்துள்ளது. மிக்ஜாம் புயலின் போது வீசிய பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக பழவேற்காடு கடலில் இருந்து கடல் மண் முற்றிலுமாக அடித்து வரப்பட்டு இந்த சிந்தாமணி குப்பம் பகுதியில் அமைந்துள்ள பழைய முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள சாலையை முற்றிலுமாக மணல் திட்டுகள் மூடியுள்ளது.

சுமார் 4 அடி உயரத்திற்கு 1 கி.மீ தூரம் வரை மணல் திட்டுகள் முற்றிலுமாக சூழ்ந்துள்ளதன் காரணமாக இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் முற்றிலுமாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை முற்றிலுமாக முடங்கி இருப்பதால் மணல் திட்டுகளை உடனடியாக அப்புறப்படுத்தி வாகனங்கள் சென்றுவர உள்ளாட்சி அமைப்பினரும், மாவட்ட நிருவாகமும் வாகனங்கள் சென்றுவர வழி செய்யவேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மிக்ஜாம் புயலால் காணாமல் போன சாலை: மணலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mikjam storm ,Tiruvallur ,Palavekkat ,Kattupally ,Mijam storm ,Dinakaran ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...