×

மிக்ஜாம் புயல் பாதிப்பு; அரையாண்டு தேர்வு தொடர்பாக திருப்புதல் பயிற்சி அளிக்க வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கழகம் வேண்டுகோள்

திருவள்ளூர்: தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுச் செயலாளர் சா.ஞானசேகரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது; மிக் ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இந்த காரணத்தினால் 4 மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்சார வசதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த குறுகிய காலத்தில் பெருமளவு மழை பெய்துள்ளதால் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளில் தமிழக அரசு எடுத்து உள்ளது. இது மிகவும் பாராட்டுக்குரியது. தமிழக அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இன்னும் பல இடங்களில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களுடன் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகமும் துணை நிற்கும். அதே நேரத்தில் மேற்கண்ட மாவட்டங்களில் மாணவர்கள் அரையாண்டு தேர்வுக்கு தயார் செய்வதற்கு போதுமான கால அவகாசம் இல்லாத காரணத்தினாலும் அதற்கான சூழ்நிலை இல்லாத காரணத்தினாலும் மாணவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு முக்கியமாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடர்பாக திருப்புதல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை மாணவர்களின் நலன் கருதி அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் தேர்வுத்துறைக்கும் தமிழக அரசையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றது. இவ்வாறு கூறியுள்ளார்.

The post மிக்ஜாம் புயல் பாதிப்பு; அரையாண்டு தேர்வு தொடர்பாக திருப்புதல் பயிற்சி அளிக்க வேண்டும்: தலைமை ஆசிரியர்கள் கழகம் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Head Teachers' Association ,Thiruvallur ,State General Secretary ,Tamil Nadu High School Head Teachers Association ,Cha. Gnanasekaran ,Mick Jam… ,Mick Jam ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்