×

சென்னை மழை வெள்ள பாதிப்புகளை அரசு திறமையாக கையாண்டுள்ளது; கே.எஸ்.அழகிரி பேட்டி

கும்பகோணம்: மறைந்த முன்னாள் எம்பி ராமலிங்கத்தின் சிலை திறப்பு விழா, அரியலூர் மாவட்டம் டி.பழூர் சோழன்மாதேவியில் இன்று நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று தர்மபுரியிலிருந்து மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கும்பகோணம் வந்தார். அவர் அளித்த ேபட்டி: காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் வாக்கு சாவடி கமிட்டியின் பாசறை அமைத்து வருகிறோம். சென்னையை பொறுத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறமையாகவே கையாண்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி உருவாகிய புயல், சென்னை மாநகரத்தின் மேல் மட்டும் 17 மணி நேரம் மையம் கொண்டு மழை பெய்தது. இந்தியாவில் உள்ள எந்த ஒரு நகரமும் இது போல தொடர்ந்து மழை பெய்தால் தாங்காது. இது மனித பிழை அல்ல, இயற்கை பேரிடர். எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள், நியாயமானவர்கள் எங்கேயும் இருக்கின்றனர். இதில் எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்பது முக்கியமல்ல.

நியாயமானவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் ஏற்று கொள்ளக்கூடியது. வடிகால் சீரமைப்புக்கு ரூ.4000 கோடியை தமிழக அரசு முறையாக செலவு செய்துள்ளனரா என்பதை மாநில தணிக்கை குழு முடிவு செய்யும். குறை சொல்வது எளிது. இந்தியா கூட்டணி தற்போது பளிச்சென உள்ளது. மாநில அரசு கேட்டுள்ள 5000 கோடி ரூபாய் நிவாரண தொகையை ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.

The post சென்னை மழை வெள்ள பாதிப்புகளை அரசு திறமையாக கையாண்டுள்ளது; கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,KS Alagiri ,Kumbakonam ,Ramalingam ,D. Bhaur Cholanmadevi ,Ariyalur district.… ,Chennai government ,KS ,Alagiri ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கூத்தாநல்லூர் கிளை இடமாற்ற விழா