×

திருவாரூரில் மகளுக்காக கோயில் கட்டிய பாசமிகு தந்தை: மகளின் முகச்சாயலில் அம்மன் சிலையை அமைத்து வழிபாடு

திருவாரூர்: மன்னார்குடி அருகே காலமான தனது மகளை கடவுளாக பாவித்து கோவில் கட்டிய தந்தை குடமுழுக்கு விழாவையும் கோலாகலமாக நடத்தியுள்ளார். தந்தை மட்டுமல்ல ஒரு கிராமமே குழந்தையை கடவுளாக ஏற்றுக்கொண்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே குள்ளமங்கலம் கிராமத்தில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள அத்தீபிராக்கியா அம்மன் கோயில் பலரதும் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இது பாசமிகு தந்தை ஒருவர் காலமான தனது மகளுக்காக கட்டி வழிபாடு வரும் ஒரு கோவிலாகும். குள்ளமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த சௌந்தரபாண்டியன், மஞ்சுளா தம்பதி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தனர். 5 ஆண்டுகளுக்கு முன் அவரது 2 வயது பெண் குழந்தை சக்திபிராக்கியா வீட்டருகே உள்ள குளத்தில் விழுந்து உயிரிழந்தார்.குழந்தை மீதான அதீத பாசத்தின் விளைவாக சக்திபிராக்கியாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்த சௌந்தரபாண்டியன் 3 ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்து கோயில் கட்டி வந்தார்.

கோயிலில் மகளின் முகசாயலில் அம்மன் சிலையை அமைத்த அவர் சக்திபிராக்கியா அம்மன் என்று பெயரிட்டார். கோயில் பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் வேத விற்பன்னர்களை வைத்து, யாகம் வளர்த்து ஆகம விதிமுறைபடி குடமுழுக்கு வைபவத்தையும் விமர்சையாக நடத்தினார் தந்தை சௌந்தரபாண்டியன் குடும்பம் மட்டுமல்லாமல் குள்ளமங்கலம் கிராமமக்களும் குழந்தையை தெய்வமாக ஏற்று கொண்டு சக்திபிராக்கியா அம்மனை வழிபாடு வருகின்றனர். மகள் நினைவாக கட்டியுள்ள கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடத்த இருப்பதாகவும் சௌந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூரில் மகளுக்காக கோயில் கட்டிய பாசமிகு தந்தை: மகளின் முகச்சாயலில் அம்மன் சிலையை அமைத்து வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Tiruvarur ,Mannargudi ,Kudamuzku ,
× RELATED மன்னார்குடி அரசு மருத்துவமனையில்...