×

ஊட்டி அருகே உள்ள அறிவுசார் மையத்திற்கு புத்தகங்கள் வாங்க ரூ.1.25 லட்சம் நிதியை கலெக்டர் வழங்கினார்

ஊட்டி : ஊட்டி காந்தல் பகுதியில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்திற்கு புத்தகங்கள் வாங்க முன்னோடி வங்கி சார்பில் ரூ.1.25 லட்சம் நிதியை நகராட்சி ஆணையரிடம் கலெக்டர் வழங்கினார். நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சாலை, குடிநீர், வீட்டுமனை பட்டா, பஸ்வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து சுமார் 170 மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் வேண்டி கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீதும் அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்திற்கு புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.1.25 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் அருணா, நகராட்சி ஆணையர் ஏகராஜிடம் வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2021ம் ஆண்டிற்கு 100 சதவீதம் கொடிநாள் வசூல் செய்ததற்காக மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் ேபரூராட்சிகள் உதவி இயக்குநர் இப்ராஹிம் ஷா ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா 30 கிராம் மதிப்பிலான வெள்ளி பதக்கத்தை வழங்கி பாராட்டு ெதரிவிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியத்தின் சார்பில் 10 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஒவேலி பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் சுப்பிரமணியம் மிக்ஜாம் புயல் நிவாரண உதவித்தொகையாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையினை கலெக்டரிடம் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் சக்கரபாணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் இந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டி அருகே உள்ள அறிவுசார் மையத்திற்கு புத்தகங்கள் வாங்க ரூ.1.25 லட்சம் நிதியை கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Pioneer Bank ,Kanthal ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...