×
Saravana Stores

பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழப்பு.. கரையோரங்களில் உயிரினங்கள் வலிப்பால் துடிக்கும் அவலம்!!

பிரேசில் : பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்துள்ளன.H5N1 வைரஸால் ஏற்படும் பறவை காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா (Avian influenza) உலகில் அதிகரித்து வருகிறது. இந்த வகை இன்ஃப்ளூயன்ஸா முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது, அதோடு கூட மனிதர்களுக்கும் இது பரவுகிறது. பாதிக்கப்பட்ட பறவையுடன் மக்கள் நேரடி தொடர்பு கொள்வதால் அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த நோய் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படலாம். பறவை காய்ச்சல் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது.

அந்த வரிசையில் பிரேசிலில் Rio Grande do Sul மாகாணத்தில் மிகவும் வேகமாக தொற்றக்கூடிய பறவை காய்ச்சல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக 942 கடல் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கும் அதிகாரிகள், கடற்கரை ஓரங்களில் பல உயிரினங்கள் வலிப்பால் துடிப்பதாகவும் தெரிவிக்கின்றன. தொற்று பாதிப்பு பரவாது இருக்க பறவை காய்ச்சலால் இறந்த கடல் உயிரினங்களை புதைக்கவும் எரிக்கவும் செய்கின்றன. தென் அமெரிக்க நாட்டில் முதல்முறையாக இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

The post பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழப்பு.. கரையோரங்களில் உயிரினங்கள் வலிப்பால் துடிக்கும் அவலம்!! appeared first on Dinakaran.

Tags : Brazil ,Dinakaran ,
× RELATED சீனாவின் சர்வதேச திட்டத்தில் சேர பிரேசில் மறுப்பு